tamilnadu

img

கூகுள் போன்களை ஹேக் செய்தால் 7 கோடி ரூபாய் பரிசு 

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் உள்ள ஆண்ட்ராய்டு வசதி கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது ஆகும். எந்த ஸ்மார்ட்போன்களாக இருந்தாலும் கூகுளின் ஆண்ட்ராய்டு இல்லாமல் செயல்படமுடியாது. ஏனென்றால் ஸ்மார்ட்போன்களின் இயங்குதளம் ஆண்ட்ராய்டு அமைப்பில் தான் உள்ளது. இதனை OS (operating system) என அழைப்பார்கள். இத்தகைய சிறப்பையுடைய  கூகுளின் ஆண்ட்ராய்டு நிறுவனம் கடந்த சில வருடங்களாகச் சொந்தமாக ஸ்மார்ட்போன்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. 

கூகுளின் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அவ்வளாக பிரபலம் கிடையாது. இதற்கு காரணம் விலை (ரூ.30,000க்கு மேல்) தான். நவீன வசதிகள் பல இருந்தாலும் விலையை காரணம் காட்டி இந்தியர்கள் இந்த வகை போன்களை கண்டுகொள்ளமாட்டார்கள். இந்நிலையில், கூகுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,"நாங்கள் தயாரிக்கும் பிக்ஸல் வகை (பிக்சல் 3,4 வகை மட்டும்) ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்பவர்களுக்கு ஒரு மல்லியன் டாலர் (ரூ.70 கோடி) பரிசுத்தொகை அளிக்க தயார் நிலையில் இருக்கிறோம்" என அறிவித்துள்ளது.    

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்பிள் வகை ஸ்மார்ட்போன்களை ஹேக்கர்களால் ஹேக்கிங் செய்யப்பட்டது. ஆப்பிளுக்கும் பிக்ஸல் வகை பயன்பாடுகளை கூகுள் தான் அளித்து வந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் சேதார நிகழ்வைச் சரிக்கட்டும் வகையில் புதிய தொழிநுட்பத்தை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி தற்போது ஹேக்கர்களுக்கு சவால் விடுத்துள்ளது.

;